இலங்கை
Typography

குற்றப் புலனாய்வு பிரிவினர் தன்னிடம் மேற்கொண்ட விசாரணையை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

ஊடகவியலாளர் கீத் நொயர் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவத்தை அரசாங்கம் அரசியல் நோக்கங்களிற்காக பயன்படுத்துகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினர் தன்னிடம் மூன்று மணிநேரம் விசாரணை நடத்தியதாகவும் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “அரசாங்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் என்னிடமிருந்து வாக்குமூலத்தை பெறுமாறு குற்றப் புலனாய்வு பிரிவினரை தூண்டியிருக்க வேண்டும். அவர்கள் கீத் நொயர் கடத்தப்பட்ட பின்னர் கரு ஜெயசூர்ய என்னை தொலைபேவி மூலம் தொடர்புகொண்டாரா? அதன் பின்னரே கீத் நொயர் விடுவிக்கப்பட்டாரா என என்னிடம் கேள்வி எழுப்பினர்? எனக்கு அது குறித்து எதுவும் நினைவில் இல்லை. என்னை பலர் தொலைபேசியில் தொடர்புகொள்வார்கள்.

அரசாங்கம் தனது அரசியல் நோக்கங்களை அடைவதற்காக பல விடயங்களை செய்கின்றது. இது அவ்வாறான ஓரு சம்பவம் அரசாங்கத்தின் பழிவாங்கும் நடவடிக்கைகளை இது வெளிப்படுத்துகின்றது. அவர்கள் இவ்வாறான விடயங்கள் தங்களிற்கு நடக்காது என நினைக்கவேண்டும்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்