இலங்கை
Typography

“நான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதா? இல்லையா? என்பது குறித்து பின்னர் பார்த்துக் கொள்வோம். முதலில் நான் போட்டியிட முடியுமா?, என்பதற்கான விளக்கத்தை நீதிமன்றத்திடம் பெற்றுக் கொள்ள வேண்டும்.” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

பிலியந்தல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“19வது திருத்தச் சட்டத்தில் தெளிவில்லாத ஒரு நிலைமை உள்ளது. 19வது திருத்தச் சட்டத்துக்கு முன்னர் இருந்த ஜனாதிபதிகளுக்கு அச்சட்டம் பொருந்துகின்றதா? இல்லையா ? என்பது குறித்த தெளிவை உயர் நீதிமன்றத்திடம் கோரவேண்டியுள்ளது. தீர்ப்பு ‘முடியும்’ என்று வந்தால், எனக்கு மட்டுமல்ல, முன்னர் ஜனாதிபதியாக இருந்த சகலருக்கும் அது பொருந்தும்.” என்றும் மஹிந்த ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்