இலங்கை

‘அரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும். இதுவரை இலங்கை மூன்று அரசியலமைப்புக்களை நிறைவேற்றியுள்ள போதிலும், அவற்றில் ஒன்றுகூட சமூக ஒப்பந்தத்தைக் கொண்டிருக்கவில்லை.’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக, இரத்தினபுரியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

சுமந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “அரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும். இதுவரை நாம் 3 அரசியலமைப்பைக் கொண்டிருந்த போதிலும், ஒரு சமூக ஒப்பந்தத்தைக் கூட கொண்டிருக்கவில்லை.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தெற்கைச் சேர்ந்த 6 முதலமைச்சர்களால் பரிந்துரைக்கப்பட்ட அதிகார பரவலாக்க திட்டமே முன்வைக்கப்பட்டுள்ளது. அதில் 7வது முதலமைச்சர், ஆளுநர் பதவியை இல்லாதொழிப்பது தொடர்பில் கூறியிருந்தார். எனினும் அதனை நாங்கள் புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கவில்லை.

எனவே முன்மொழியப்பட்ட சமூக ஒப்பந்தத்தின் பிரதான நோக்கம், பிரிக்கப்படாத ஒரே நாட்டினுள் இலங்கையில் வசிக்கும் சகலருக்கும் அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதே ஆகும்.

இந்த நாட்டில் கூட்டாட்சியை முதலில் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க அறிமுகப்படுத்தினார். இந்நிலையில் அவ்வாறு அமையப்பெற்ற பிரதான இரண்டு கட்சிகளும் அரசாங்கத்தில் இருப்பது இதுவே முதல்முறையாகும். அதுமட்டுமன்றி சகல அரசியல் கட்சிகளும் இதில் பங்கேற்றுள்ள நிலையில், இந்த சந்தர்ப்பத்தை ஒருபோதும் தவறவிடக்கூடாது.” என்றுள்ளார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான மறைந்த ஆறுமுகம் தொண்டமானுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சற்றுமுன்னர் (இன்று புதன்கிழமை) அஞ்சலி செலுத்தினார். 

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் (வயது 56) சற்றுமுன்னர் (இன்று செவ்வாய்க்கிழமை) காலமானார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் லாக்டவுன் தாக்கத்துடன் ஏற்கனவே போராடிக்கொண்டு இருக்கும் விவசாயிகளின் நிலங்களை பெரும் அளவிலான வெட்டுக்கிளிகள் அழித்துவருகின்றன.

நாடு தழுவிய பொதுமுடக்கம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே மத்தியில் ஆளும் பாஜக அரசு திரைமறைவில் பல்வேறு மக்கள் விரோதத் திட்டங்களை அரங்கேற்றி வருகிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

ஹாங்கொங்கை சீனாவிடம் இருந்து தன்னாட்சி பெற்ற தேசமாக இனியும் கருத முடியாது என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளாரன மைக் பொம்பெயோ அமெரிக்க காங்கிரஸில் டிரம்ப் நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.

Worldometers இணையத் தளத்தின் அதிகாரப்பூர்வ சமீபத்திய தகவல் படி உலகம் முழுதும் 213 நாடுகளில் பரவியிருக்கும் கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான முக்கிய புள்ளி விபரம் கீழே :