இலங்கை

“வடக்கில் வீடுகள் அமைக்கும் திட்டத்தை எந்த நாடு முன்னெடுக்கின்றது என்பது முக்கியமல்ல. மாறாக, மக்களின் தேவைகளையும், விரும்பத்தினையும் பூர்த்தி செய்யும் வகையிலான தரமான வீடுகளே முக்கியம்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

வடக்கு மக்கள், கல் வீட்டுத் திட்டத்தையே விரும்புகின்றனர் எனத் தெரிவித்துள்ள அவர், அத்திட்டத்தை இந்தியாவே முன்வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் வீடுகளற்ற மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பது தொடர்பில், இந்தியாவையும் சீனாவையும் சேர்ந்த நிறுவனங்கள் தமது திட்ட முன்மொழிவுகளைச் சமர்ப்பித்துள்ளன.

இத்திட்டங்களில் எத்திட்டத்தை ஏற்றுக்கொள்வது என்பது தொடர்பாகவும், அதில் அந்நாடுகளின் தலையீடுகள் உள்ளனவா என்பது தொடர்பாகவும், அண்மைக்காலத்தில் சர்ச்சைகள் எழுந்திருந்த நிலையில், கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பாக எம்.ஏ.சுமந்திரனிடம் வினவிய போதே, அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, "சீன நிறுவனமும், 40 ஆயிரம் வீடுகளை அமைப்பதாக, தனது திட்ட முன்மொழிவைக் கொடுத்துள்ளது. ஆனால், அது கல் வீடல்ல. கொங்கிறீட் போன்ற ஒன்றால் அமைக்கப்படும் வீடாகும். ஆனால் இந்தியா, அதே பணத்துக்கு, கல் வீட்டுத் திட்டத்தை அமைப்பதற்குத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

எமது மக்களுக்கு, கல் வீடே விருப்பம். எனவே, இந்தியாவுடன் பேசி, அவ்வீட்டுத் திட்டத்தை முன்னெடுக்குமாறு, அரசாங்கத்துக்கு நாம் தெரிவித்துள்ளோம்.” என்றுள்ளார்.

இதைத் தொடர்ந்து, "அப்படியாயின், இந்திய வீட்டுத் திட்டத்தைத் தான் கூட்டமைப்பு விரும்புகின்றதா?" என அவரிடம் மீண்டும் வினவிய போது, "கல் வீட்டுத் திட்டத்தைத் தான், கூட்டமைப்பு விரும்புகின்றது. இனி நீங்கள் செய்தி எழுதும் போது, இந்தியா, சீனா என்று எழுதுவீர்கள். அதற்காக தான் மறுபடியும், இந்தியாவா, சீனாவா என்று கேட்கின்றீர்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கல் வீட்டுத் திட்டத்தைத் தான் விரும்புகின்றது. அதனைத் தான், எமது மக்கள் விரும்புகின்றார்கள். எனவே, இந்தியாவோ, சீனாவோ இல்லை, ரஷ்யாவோ யார் கல் வீட்டைக் கட்டினாலும், நாம் ஏற்றுக்கொள்வோம். எமது மக்களுக்குத் தேவையான, விருப்பமான கல் வீட்டுத் திட்டத்தை நடமுறைப்படுத்த வேண்டும் என்பது தான், கூட்டமைப்பின் நிலைப்பாடு" என்று மேலும் கூறியுள்ளார்.

“எமது நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருந்தால், எம்மைப் புறந்தள்ளிவிட்டு ஒரு அரசியலமைப்பினை அரசாங்கத்தினால் உருவாக்க முடியாது.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

“எமது மக்களின் உரிமைகளுக்காக தமது உயிர்களைத் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான உரிமை மறுக்கப்பட்டிருப்பது கொடுமையிலும் கொடுமையாகும்.” என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

7 மாநில முதல் மந்திரிகளுடனான கொரோனா ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்துரையாடினார்.

இன்று அதிகாலை குஜராத்தில் உள்ள ஓ.என்.ஜி.சி ஆலையில் திடிரென தீ விபத்து ஏற்பட்டது.

நாளை வெள்ளிக்கிழமை முதலான வார இறுதி நாட்களில், சுவிற்சர்லாந்தின் பல பகுதிகளில் பனிப்பொழிவு இடம்பெறலாம் என சுவிஸ் வானிலை மையம் அறிவித்துள்ளது.

சுவிற்சர்லாந்தின் புகழ்பெற்ற லொசேன் ஈ.எச்.எல் ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மென்ட் கல்விக் கூடத்தில் சுமார் 2,500 மாணவர்கள், கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என பிராந்திய அதிகாரிகள் நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளனர்.