இலங்கை
Typography

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் அநுரத்த பாதெனியாவின் செயற்பாடுகள் நாட்டில் புதிய ஹிட்லரை ஆட்சிக்கு கொண்டு வரும் நோக்கிலானது என்று நிதி மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர குற்றஞ்சாட்டியுள்ளார். 

அநுருத்த பாதெனிய சண்டே ஒப்சேவர் பத்திரிகையின் ஊடகவியலாளரை அச்சுறுத்தியமை தொடர்பில் அமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தினார். அதன்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, ‘பாதெனியவின் செயற்பாடுகள் ஹிட்லர் அல்லது தலிபான்களின் செயற்பாடுகள் போலவே இருக்கின்றன. சண்டே ஒப்சேவர் ஊடகவியலாளர் ஒருவர் செய்தி தொடர்பாக தொலைபேசி மூலம் கருத்தை அறிவதற்கு அழைப்பை ஏற்படுத்தியுள்ளார். இதன்போது எந்தவொரு நபரையும் மூளை பாதிக்கப்பட்டவர் என்பதை தம்மால் முறையாக நிரூபிக்க முடியும் எனக் கூறியுள்ளார். தலிபான்கள் அல்லது ஹிட்லர் ஆட்சியில் இவ்வாறான செயற்பாடுகளே முன்னெடுக்கப்பட்டன. எனினும் இலங்கையில் அவ்வாறான நடவடிக்கைகளுக்கு இடமளிக்கப்படாது. ஹிட்லர்களை ஆட்சிக்குக் கொண்டுவர முயற்சிக்கும் குழுவில் பாதெனியவும் இருப்பது தற்பொழுது புலனாகியுள்ளது.’ என்றார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS