இலங்கை
Typography

வடக்கு- கிழக்கு மாகாணங்களுக்கான அபிவிருத்தி செயலணிக் கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டாம் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களிடம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. 

வடக்கு- கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி அடுத்த வாரம் கூடவுள்ளது. இந்நிலையில் அரசியல் தீர்வு ஒன்று எட்டப்படும் வரை அபிவிருத்தி செயலணியில் தாம் கலத்து கொள்ளப் போவதில்லை எனவும், கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டாம் எனக்கோரி முதலமைச்சர் விக்னேஸ்வரன், கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

இந்த கடிதத்தின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு நேற்று வியாழக்கிழமை கூடி ஆராய்ந்துள்ளது.

இதன்போது வடக்கு- கிழக்கு மாகாணங்களில் மக்களுக்கு பல்வேறு அபிவிருத்தி சார் பிரச்சினைகள் உள்ளன. இதற்கும் மேல் நில ஆக்கிரமிப்பு, சிங்கள குடியேற்றங்கள், இராணுவ ஆக்கிரமிப்புக்கள் என பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இவை குறித்து பேசுவதற்கும் தீர்வினை காண்பதற்கும் சிறந்த களமாக ஜனாதிபதி செயலணி அமைந்துள்ளது. ஆகவே, செயலணியின் கூட்டத்தில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர். இதனை அடுத்து கூட்டத்தில் கலந்து கொள்வதென தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்