இலங்கை
Typography

இலங்கையில் இடம்பெற்ற முரண்பாடுகளின் காரணமாக இதுவரை 21,000க்கும் அதிகமானோர் காணாமல் ஆக்கப்பட்டிருக்கலாம் என்று காணாமல் போனோருக்கான பணியகத்தின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுடான சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். 

எனினும், இந்த எண்ணிக்கையே இறுதியானது எனும் முடிவுக்கு வரமுடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே சாலிய பீரிஸ் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “காணாமல் போனோருக்கான அலுவலகம், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்ட ஏனைய ஆணைக்குழுக்களை போல் அல்லாது, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்துள்ளது என்பதை கண்டறியும் செயற்பாடுகளில் ஈடுபடும்.

சர்வதேச செஞ்சிலுவை சங்கம் 2016ஆம் ஆண்டு வெளியிட்ட தரவுகளின்படி, 16 ஆயிரம் பேரும், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஆராயும், பரணகம ஆணைக்குழுவின் தரவுகளின்படி, 21 ஆயிரத்துக்கு மேற்பட்டோரும், கிராம சேவகர்களூடாக, தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சு பெற்றுக்கொண்டுள்ள தரவுகளின்படி, 13 ஆயிரம் பேரும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.” எனவே மேற்குறித்த தரவுகளின் அடிப்படையில், உறுதியாக கூறமுடியாவிட்டாலும், 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்