இலங்கை
Typography

தேர்தல் முறைமை தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்களை நீக்கி, விரைவில் தேர்தல்களை நடத்துவோம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

‘மாகாண சபைகளுக்கான தேர்தலை உரிய காலத்தில் நடத்துவதில் சிக்கல்நிலை தோன்றியுள்ளது. அதாவது தேர்தலை எம்முறைமையில் நடத்துவது என்பதில் உடன்பாடற்ற தன்மை காணப்படுகின்றமையானது தேர்தல் பிற்போடப்படுவதற்கு காரணமாகியுள்ளது. இருந்தபோதிலும் தேர்தலை விரைவாக நடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பான இறுதித் தீர்மானங்களின் அடிப்படையில் தேர்தலை விரைவில் நடத்துவதற்கான முயற்சிகளை எடுப்போம்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2018ஆம் ஆண்டுக்கான கட்டுமான நிர்மானதுறைசார் கண்காட்சி அங்குரார்ப்பன நிகழ்வு கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS