இலங்கை
Typography

‘வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அரசியலில் இருந்து விலக வேண்டுமா, இல்லையா என்பது தொடர்பாக வடக்கு மக்களே தீர்மானிக்க வேண்டும். அது தொடர்பாக தென்பகுதி தலைவர்கள் தீர்மானிக்க முடியாது’ என்று வடக்கு மாகாண உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். 

விக்னேஸ்வரன் அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்த கருத்து தொடர்பாக வினவிய போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சிவாஜிலிங்கம் மேலும் கூறியுள்ளதாவது, ‘சம்பிக்க ரணவக்க இனவெறி தனத்தை பிரதிபலிப்பத்து வருகிறார். அரசியலில் இருந்து ஒய்வு பெறுவதா, இல்லையா என்பதை விக்கினேஸ்வரனே தீர்மானிக்க வேண்டும். அவரை பிரதிநிதியாக நியமிப்பதா, இல்லையா என்பதை வடக்கு மக்களே தீர்மானிக்க வேண்டும். இது தொடர்பாக தெற்கில் உள்ள தலைவர்கள் எவரும் தீர்மானிக்க முடியாது.

நீங்கள், இராணுவ வீரர்களுக்கு வைக்கின்ற நினைவுச் சின்னங்களே விடுதலைப் புலிகளது வீர வரலாற்றை பறைசாற்றும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். எவ்வாறு உங்கள் இராணுவம் கொல்லப்பட்டது என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமாக இருந்தால், அதில் எமது போராட்ட வரலாறும் கூறப்பட வேண்டும் என்பதை மறந்து வீடாதீர்கள்.

அத்துடன், பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை வைத்துக்கொண்டு நீங்கள் ஆளும் இனம், நாங்கள் ஆளப்படும் இனம் என்ற சிந்தனை இருக்கும் வரை, நிரந்தர அரசியல் தீர்வோ, நல்லிணக்கமோ ஏற்படாது” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்