இலங்கை

மாகாண சபைத் தேர்தலை எந்தக் காரணத்திற்காகவும் ஒத்திவைக்கக் கூடாது என்று சபாநாயகர் கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார். 

மாகாண சபைத் தேர்தலுக்கான எல்லை நிர்ணய குழுவின் அறிக்கைக்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரம் கிடைக்காமையால் சபாநாயகர் அரசியலமைப்புக்கு அமைய செயற்படுவது அவசியமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது பற்றி பாராளுமன்ற குழு நிலைக் கூட்டத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது, எந்தக் காரணத்திற்காகவும் மாகாண சபைத் தேர்தல் ஒத்தி வைக்கப்படக்கூடாது என சபாநாயகர் வலியுறுத்தினார்.

கட்சித் தலைவர்களுக்கு மேலதிகமாக தேர்தல்கள் ஆணைக்குழு எல்லை நிர்ணய ஆணைக்குழு என்பனவற்றின் தலைவர்களுடன் சபாநாயகர் இதன் போது கலந்துரையாடினார்.

சபாநாயகரால் பிரதமர் தலைமையில் பெயரிடப்படவிருக்கும் குழு இந்தப் பரிந்துரையில் ஒக்டோபர் மாத நடப்பகுதியில் வழங்குமாயின் அடுத்த வருடம் ஜனவரி மாதமளவில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான முழுமையான ஆதரவை வழங்குவதாக கட்சிகளின் தலைவர்கள் அறிவித்தார்கள்.

இதற்கமைய கட்சிப் பிரதிதிநிதிகளின் அங்கீகாரத்துடன் ஐந்து பேர் அடங்கிய குழுவை சபாநாயகர் அறிவிக்க இருக்கிறார். பிரதமர் தவிர்ந்த குழுவில் அங்கம் வகிக்கவிருக்கும் ஏனைய உறுப்பினர்கள் துறைசார் புத்திஜீவிகள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கைக் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் சற்று முன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவதாக சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவில் மீண்டும் ஒரு முறை பன்றிகளிடம் இருந்து மனிதர்களிடையே பரவும் புதிய வகை வைரஸ் கண்டு பிடிக்கப் பட்டிருப்பதாகவும், இதுவும் கொரோனா போன்று பரவக் கூடும் என்றும் சமீபத்தில் ஊடங்களிடையே பரபரப்புச் செய்தி வெளியாகி இருந்தது.

3 மாதத்துக்கும் அதிகமான கடுமையான லாக்டவுன் காலத்தை அடுத்து இங்கிலாந்தில் இன்று சனிக்கிழமை முதற்கொண்டு பப்களும், உணவு விடுதிகளும் திறப்பதற்கு அனுமதியளிக்கப் பட்டுள்ளது.