இலங்கை

முல்லைத்தீவில் நாளை செவ்வாய்க்கிழமை (28 ஆம் திகதி) நடைபெறவுள்ள ‘முல்லை நிலங்கள் மற்றும் கடல் வளங்கள்’ மீட்புப் போராட்டத்தில் தமிழ் மக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. 

கூட்டமைப்பின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

“முல்லைத்தீவு தமிழ் மக்கள் பொது அமைப்புக்கள் அணிதிரண்டு 28ஆம் திகதியன்று முல்லை நிலங்கள் மற்றும் கடல் வளங்கள் காலா காலமாக ஆக்கிரமிக்கப்பட்டும் சூரையாடப்பட்டும் வருங் கொடுமைகளுக்கெதிராக முல்லை மாவட்ட செயலகத்தின் முன்றலில் கவன ஈர்ப்புப் போராட்டம் நடத்துவதற்கு அறிவித்துள்ளன.

போர்க்காலத்திலும் போரின் பின்னரும் இலங்கை இராணுவம் தமிழ் மக்களின் வேளாண்மை நிலங்களையும் ஆக்கிரமித்துள்ளது. மறுபுறம் அரசின் இராணுவத்தின் அனுசரனையடன் தென்னிலங்கைச் சிங்கள மக்கள் அத்துமீறிக் குடியேறுகின்றனர்.

ஒரு புறம் கடலில் தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களைப் பாவித்து ஆழ்கடல் வரை மீன் வளங்கள் கொள்ளையிடப்படுகின்றன. மீன் வளம் அழிகின்றது. தமிழ் மீனவர் வாழ்வாதாரம், வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது. தென்னிலங்கை மீனவர் செல்வம் கொழிக்கிறது. தமிழ் மீனவர் வறுமையில் வாடுகின்றனர்.

அதே போல தமிழ் மக்கள் வளமான வேளாண் நிலங்களும் குடியிருப்பு நிலங்களும் இராணுவத்தினாலும் தென்னிலங்கைச் சிங்களவர் ஆக்கிரமிப்பினால் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களினால் தமிழர் நிலம் சிங்களவர் நிலமாகின்றது. தமிழினத்தின் இன அடையாளம் அழிக்கப்படுகிறது.

தமிழர் பிரதேசத்தின் குடிப்பரம்பல் குலைக்கப்பட்டு எதிரிகளாக்கப்பட்டு வெளியேற்றப்பட்டும் அழிக்கப்பட்டும் சிங்கள மயமாக்கப்பட்டு வரும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. தமிழர் வாழ்வும் இன அடையாளமும் அழிக்கப்படுகிறது.

தற்போது மகாவலி நீர் பாச்சல் திட்டத்தினுல் தமிழர் நிலங்களில் தென்னிலங்கைச் சிங்கள மக்கள் குடியேற்றப்படும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. மகாவலி வலயப் பிரகடனங்கள் நீர் பாசனத்திறகே மட்டுப்படுத்தப்பட வேண்டும் சிங்கள குடிப்பரம்பலை, குடியேற்றத்தை கட்டியெழுப்புவதற்கு அல்ல. இத்தகைய அபாயத்தை தடுத்து நிறுத்தவும் தமிழ் மக்களையும், தமிழர் நிலங்களையும் பாதுகாக்கவும் திட்டமிட்ட நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன.

காணி அதிகாரம், மகாவலி நீர் பாய்ச்சல் திட்டம் மற்றும் குடியேற்ற அதிகாரம் தமிழர் பிரதேசத்தில் தமிழ் மக்களிடம் இருக்க வேண்டும். அல்லது தமிழர் அரசியல் பலமும் அதிகாரமும் சிதைக்கப்பட்டுவிடும்.

ஆத்தோடு தமிழர் பிரதேசங்களில் 1. வனப் பிரதேசம் , 2. வுன விலங்கு வாழ் பிரதேசம் , 3. தொல்லியல் பாதுகாப்புப் பிரதேசம் , 4. இராணுவ உயர் பாதுகாப்புப் பிரதேசம் , 5. கடலோரப் பாதுகாப்புப் பிரதேசம் அதை விட புதிய பௌத்த சிலைகள், விகாரைகள் வளாகங்கள் புனித பிரதேசங்கள் எனும் பிரகடணங்களால் தமிழர் பிரதேசங்கள் ஆக்கிரமிக்கப்படுவதால் தமிழர் இனம், தமிழர் நிலம், தமிழர் குடியிருப்புக்கள், சமூக பொருளாதார கட்டமைப்புக்கள் அடக்குமுறைக்கும், ஆக்கிரமிப்புக்கும், ஒழிப்புக்கும் ஆழாகின்றன.

இத்தகைய தமிழ் இன அடக்குமுறை ஒடுக்குமுறை அழிப்பு நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தி தமிழினத்தையும், தமிழ் நிலத்தையும், தமிழர் சமூக பொருளாதார கட்டமைப்பையும், தமிழர் வாழ்வுரிமையையும் பாதுகாத்துப் பேண வேண்டும் எனும் அவசிய தேவையை உணர்தியது இத்தகைய அமைதிவளிப் போராட்டங்கள், விழிப்புணர்வுப் பேரணிகள் நடத்தப்படுவது காலத்தேவையாகும்.

இந் நோக்கில் அணி திரளும் மக்கள் எவ்வகையிலும் வன்முறைகளுக்கு இடமளிக்காமல் கண்ணும் கருத்துமாய் தமிழர் அலங்கை இலட்சிய தாகத்தை மேம்படுத்தி நிற்கவேண்டும் எனவும் கேட்டு நிற்கின்றோம்.” என்றுள்ளது.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சிக்கு புதியத் தலைமைத்துவம் அவசியம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

புதிய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளை நிறைவேற்றும் போது, மக்கள் மையப் பொருளாதாரத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார். 

ஆகஸ்ட் 15ஆம் திகதியான இன்று இந்தியாவில் சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.