இலங்கை

“வடக்கு மாகாணத்தில் என்னால் முன்னெடுக்கப்படும் வீட்டுத்திட்டப் பணிகளுக்குத் தடங்கலை ஏற்படுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை முயற்சிக்கிறது.” என்று தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

முல்லைத்தீவில் அவரது அமைச்சால் நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட நடமாடும் சேவையின் போதே, இக்கருத்துகளை அவர் வெளிப்படுத்தினார்.

இந்நிகழ்வில் முன்னர் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடக்கு மாகாண அமைச்சர் கந்தையா சிவநேசன் ஆகியோர் வடக்கில் வீடமைப்புத் திட்டங்களில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பாகவும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும் சுட்டிக்காட்டி உரையாற்றியிருந்தனர்.

அவர்களைத் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் மனோ, வடக்கில் காணப்படும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, வீட்டுத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு, தான் தயாராகவே இருப்பதாகவும், கூட்டமைப்பினரே அதற்குத் தடையாக உள்ளதாகவும் கூறினார்.

குறிப்பாக, தன்னால் முன்னெடுக்கப்படவுள்ள வீட்டுத்திட்டத்தைத் தன்னிடமிருந்து பறித்து, வடக்கு அபிவிருத்தி அமைச்சர் டி.எம். சுவாமிநாதனிடம் கையளிக்குமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், அதன் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும், பிரதமரிடம் கடிதமொன்றை வழங்கியுள்ளனர் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது, “வீடு கட்டும் பொறுப்பை, மனோ கணேசனிடமிருந்து பறித்து எடுத்து, பழைய அமைச்சர், மூன்று ஆண்டுகளாக வீடு கட்டிக்கொண்டிருக்கும் அமைச்சர் சுவாமிநாதனிடம் வழங்குங்கள் என்று கூறினார்களா என்று கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், அவர்களின் தலைமையிடம் கேட்க வேண்டும். கடந்த காலங்களில், வீடு கட்டவில்லை; பொருத்து வீடு பொருந்தாத வீடு என்று சொல்லி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பேச்சாளரும் ஏனைய சில பாராளுமன்ற உறுப்பினர்களும் குறைசொன்னார்கள், குற்றம் சொன்னார்கள்.

இப்போது பார்த்தால், நான் வீடுகட்ட வருகிறேன்; நான் தயாராக இருக்கிறேன். இங்கு வாழும் மக்கள், எனது உறவுகள். கடந்த காலங்களில் கட்டப்படாத வீடுகளைத் தேடிக் கண்டுபிடித்து, விட்ட இடத்தில் தொடர்ந்து செய்ய முன்வரும் மனோ கணேசனை, வீடு கட்ட வேண்டாம்; சுவாமிநாதனிடம் வீடுகளைக் கட்டக் கொடுங்கள் என்று சொல்வார்களேயானால், என்ன முரண்பாடு இது?

நான் முழு நாட்டுக்குமான அமைச்சராகவே உள்ளேன். என்னை வடக்குக்கும் கிழக்குக்கும் வரக் கூடாது என்றவாறான முட்டுக்கட்டைகளை யாரும் விதிக்க முடியாது. குறிப்பாக, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர், அவ்வாறான கருத்தை முன்வைத்திருந்தார். நான் அவரைப் பார்த்ததே கிடையாது.” என்றுள்ளார்.

ஒன்பதாவது பாராளுமன்றத்துக்காக இடம்பெற்ற தேர்தலில், வன்னித் தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) 3 ஆசனங்களை வென்றுள்ளது. 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பொதுத் தேர்தலில் தோல்வியுற்றுள்ளார். 

கொரோனா பெருந்தொற்று உலகளவில் அதிகரித்து வரும் நிலையில் நேற்று இந்தியாவில் இந்நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை
19.64 லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவின் சென்னை சேமிப்பு கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரரேட் வெடிமருந்தை பாதுகாப்பா அப்புறப்படுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சுவிற்சர்லாந்து மற்றும் பிரான்சிலிருந்து நோர்வே வரும் பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என நோர்வே அரசு அறிவித்துள்ளது.

லெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடித்ததில் 73பேர் பலியாகியுள்ளனர்.