இலங்கை
Typography

“யாரும் அவசரப்பட வேண்டாம். ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் எமது அணி (கூட்டு எதிரணி) சார்பில் போட்டியிடவுள்ள ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்போம்.” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

“அரசாங்கத்தை எவ்வாறு வீட்டுக்கு அனுப்புகிறோம் என்பதை, எதிர்வரும் வரவு- செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது பாருங்கள். நாங்கள் எங்கு இருக்கின்றோம் என்பது அப்போது புரியும். மக்களின் இறைமையில் தேர்தல் பிரதானமானது. அப்படியான நிலையில், தேர்தல்களை ஒத்திவைக்காது, விரைவில் நடத்த வேண்டும்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS