இலங்கை

தீவிரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கும், தீவிரவாதத்தைப் பரப்புவோருக்கும் எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார். 

கம்பஹாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த அவர், ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ருவான் விஜயவர்த்தன மேலும் தெரிவித்துள்ளதாவது, “வடக்கிலுள்ள இராணுவ நினைவுத் தூபிகள், ஒருபோதும் அகற்றப்பட மாட்டாது. வடக்கில், தீவிரவாதச் சிந்தனையுடன் செயற்படும் சில அரசியல்வாதிகளின் நோக்கங்கள், ஒருபோதும் நிறைவேற்றப்படமாட்டாது.” என்றுள்ளார்.