இலங்கை

“மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பாரிய மனிதப் புதைகுழிக்கும் இராணுவத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அதுபோல, குறித்த மனிதப் புதைகுழி தொடர்பில் இராணுவம் மீது எந்தக் குற்றச்சாட்டுக்களும் இதுவரை முன்வைக்கப்படவும் இல்லை.” என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார். 

மன்னாரில் சதொச வளாகத்தில் பாரிய மனிதப் புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு, அதிலிருந்து எலும்புக்கூடுகளையும் மனித உடல் எச்சங்களையும் மீட்கின்ற பணிகள் சுமார் இரண்டு மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுவரை சிறுவர்களின் எலும்புக்கூடுகள் உள்ளிட்ட 90இற்கும் அதிகமான எலும்புக்கூடுகள் இந்தப் புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனினும் கொல்லப்பட்டவர்கள் யார் என்றோ, இவர்கள் எப்படிக் கொல்லப்பட்டார்கள், யாரால் கொல்லப்பட்டார்கள் என்பதோ இன்னமும் தெரியவில்லை.

எலும்புக்கூடுகள் அடங்கிய புதைகுழியில், ஆட்களை அடையாளம் காணக் கூடிய உடைகள் உள்ளிட்ட வேறு எந்த தடயப்பொருட்களும் கண்டுபிடிக்கப்படவில்லை.

மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதைகுழியில் இருந்து மீட்கப்பட்டுள்ள சடலங்களுடன் இலங்கை இராணுவத்திற்கு தொடர்புபடவில்லை என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார். நிச்சயமாக இராணுவத்துக்கும் இந்தப் புதைகுழிக்கும் எந்த தொடர்பும் இல்லை. யாருமே இராணுவத்தைக் குற்றஞ்சாட்டவுமில்லை” என்றும் அவர் கூறியுள்ளார்.

வடக்கு – கிழக்கு உள்ளிட்ட தமிழ் மக்கள் அதிகமுள்ள பகுதிகளில் தடைப்பட்டுப் போன அபிவிருத்தித் திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டு துரிதப்படுத்தப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

அமைச்சரவை அமைச்சர்கள் 28 பேரும், இராஜாங்க அமைச்சர்கள் 40 பேரும் நாளை புதன்கிழமை பதவியேற்கவுள்ளனர். 

டெல்லி உச்சநீதிமன்றத்தால் பூர்வீக சொத்து உரிமையில் சம பங்கு பெண் பிள்ளைகளும் பெறலாம் எனும் தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

இந்தியாவில் பருவமழை காலம் என்பதால் பவானிசாகர் மற்றும் மேட்டூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வடைந்து வருகிறது.

பசுபிக் பெருங்கடலில் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்த இந்தோனேசியா உலகில் நிலநடுக்கங்கள், சுனாமி மற்றும் எரிமலை போன்ற அனர்த்தங்கள் ஒரு வருடத்தில் அதிகளவில் ஏற்படும் நாடுகளில் ஒன்றாகும்.

அண்மையில் பெய்ரூட்டில் நடந்த வெடி விபத்தை அடுத்து லெபனானில் வெடித்த மக்கள் புரட்சியின் விளைவாக லெபனான் அரசின் பிரதமரான தானும், அமைச்சரவையும் பதவி விலகுவதாக அந்நாட்டு பிரதமர் ஹசன் தியாப் தொலைக் காட்சியில் அறிவித்துள்ளார்.