இலங்கை
Typography

“தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வே மிகவும் முக்கியமானதாகும். எனவே, அபிவிருத்திக்காக அரசியல் தீர்வை ஒருபோதும் விலைபேச மாட்டோம்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

வடக்கு- கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் இரண்டாவது கூட்டம், ஜனாதிபதி செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது. அங்கு உரையாற்றும் போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியிலேயே நாம் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளோம். எனவே எமக்கு அரசியல் தீர்வை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கியமாக இராணுவத்தின் பிடியிலுள்ள தமிழ் மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

கேப்பாப்புலவு மக்களின் காணிகளை விடுவிப்பதாக ஜனாதிபதி உறுதியளித்திருந்தீர்கள். ஆனால், உங்கள் வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை. காணி விடுவிப்பு என்பது மிகவும் முக்கியமானதாகும். எனவே, பொதுமக்களின் காணிகளை விடுவிக்க துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்