இலங்கை

“மகாவலி அதிகாரசபை ஊடாக தமிழர் தாயகப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த நெகிழ்வு தன்மையும் இல்லாமல் அன்றும் பேசியது, இனிமேலும் அப்படியே பேசும்” என்று கூட்டமைப்பின் செயலாளரும், தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். 

முல்லைத்தீவில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மாவை சேனாதிராஜா மேலும் கூறியுள்ளதாவது, “மகாவலி அதிகார சபை எமது நிலங்களில் சிங்கள மக்களை குடியேற்றுவதும், குடியேற்ற முயற்சிப்பதும் புதிய விடயமல்ல. அது மிக நீண்ட காலத்திற்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்ட முயற்சியாகும்.

அமைச்சர் காமினி திஸாநாயக்க காலத்தில் எங்களுடைய நிலங்களில் 40ஆயிரம் சிங்கள மக்களை 1 இலட்சம் ரூபாய் நிதி உதவியுடன் குடியேற்றுவதற்கு அவர்கள் முயற்சித்தார்கள். ஆனால் தந்தை செல்வநாயகத்தின் கடுமையான எதிர்ப்பினால் அது 3 ஆயிரம் சிங்கள குடும்பங்களுடன் நிறுத்தப்பட்டது. இந்த பிரச்சினைக்காக ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாங்கள் நெகிழ்வு தன்மை இல்லாமல் பேசியிருக்கிறோம். இனிமேலும் அவ்வாறே பேசுவோம்.

தந்தை செல்வநாயகம் அரசுடன் செய்த உடன்படிக்கைகளின் பிரகாரம் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் மக்களை குடியேற்றுவதாக இருந்தால், அது அந்த மாகாணங்களை சேர்ந்த மக்களை முதலில் குடியேற்ற வேண்டும். பின்னர் குடியேற்றப்படும் இடத்திற்கு அருகில் உள்ள தமிழ் மக்களை குடியேற்ற வேண்டும். அதுவும் இல்லாவிட்டால் வேறு மாகாணங்களில் இருக்கும் தமிழ் மக்களை குடியேற்ற வேண்டும். என்பது நியதியாக இருந்தது.

ஆனால் இன்று அந்த நியதிகள் இல்லை. எமது மக்களுடைய சனத்தொகை போதாமல் உள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்தி எங்களுடைய நிலங்களில் சிங்கள மக்கள் குடியேற்றப்படுகின்றார்கள். இந்த பிரச்சினை தொடர்பாக மயிலிட்டியில் ஜனாதிபதிக்கு முன்பாகவும், நேற்று நடைபெற்ற ஜனாதிபதி செயலணியில் எமது நாடாளுமன்ற உறுப்பினர்களும் காரசாரமாக பேசியுள்ளார்கள்.

இந்நிலையில், மகாவலி அதிகாரசபையின் தலைவரை அழைத்து பேசியபோது தாங்கள் அவ்வாறு காணி உத்தரவு பத்திரங்களை வழங்கவில்லை என கூறியுள்ளார்.அப்படியெனில் நாங்களும் மக்களும் கூறுவது பொய்யா? அல்லது மகாவலி அதிகாரசபையின் தலைவர் கூறுவது பொய்யா? என்பதை ஜனாதிபதி நேரில் வந்து பார்த்து தெளிவுபடுத்துவதாக கூறியிருக்கின்றார். அதனை அவர் நிச்சயமாக பார்க்க வேண்டும்.

எங்களுடைய மக்களின் நிலங்கள் மக்களுக்கே சொந்தமானவை. இந்த நிலத்திற்காகவே பல தியாகங்களை செய்திருக்கிறோம், பல ஆயிரக்கணக்கான உயிர் தியாகங்களை செய்திருக்கிறோம், இரத்தம் சிந்தியுள்ளோம்.

எனவே நான் இந்த இடத்தில் திட்டவட்டமாக ஜனாதிபதிக்கும், அரசுக்கும் கூறுவது ஒன்றுதான் மகாவலி நீர் எமக்கு தேவையில்லை. மகாவலி அதிகாரசபையினால் ஆக்கிரமிக்கப்பட்ட எங்களுடைய காணிகள் எங்கள் மக்களுக்கு மீளவும் கொடுக்கப்பட வேண்டும்.” என்றுள்ளார்.

வடக்கு – கிழக்கு உள்ளிட்ட தமிழ் மக்கள் அதிகமுள்ள பகுதிகளில் தடைப்பட்டுப் போன அபிவிருத்தித் திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டு துரிதப்படுத்தப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

அமைச்சரவை அமைச்சர்கள் 28 பேரும், இராஜாங்க அமைச்சர்கள் 40 பேரும் நாளை புதன்கிழமை பதவியேற்கவுள்ளனர். 

டெல்லி உச்சநீதிமன்றத்தால் பூர்வீக சொத்து உரிமையில் சம பங்கு பெண் பிள்ளைகளும் பெறலாம் எனும் தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

இந்தியாவில் பருவமழை காலம் என்பதால் பவானிசாகர் மற்றும் மேட்டூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வடைந்து வருகிறது.

பசுபிக் பெருங்கடலில் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்த இந்தோனேசியா உலகில் நிலநடுக்கங்கள், சுனாமி மற்றும் எரிமலை போன்ற அனர்த்தங்கள் ஒரு வருடத்தில் அதிகளவில் ஏற்படும் நாடுகளில் ஒன்றாகும்.

அண்மையில் பெய்ரூட்டில் நடந்த வெடி விபத்தை அடுத்து லெபனானில் வெடித்த மக்கள் புரட்சியின் விளைவாக லெபனான் அரசின் பிரதமரான தானும், அமைச்சரவையும் பதவி விலகுவதாக அந்நாட்டு பிரதமர் ஹசன் தியாப் தொலைக் காட்சியில் அறிவித்துள்ளார்.