இலங்கை

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் நிலவும் வரட்சியுடன் கூடிய வானிலையை அடுத்து, வர்ணபகவானுக்கு பெரிய பூசையொன்றை நடத்தி ஒரு மாதத்துக்குள் மழை வரவேண்டும் என வேண்டவுள்ளதாக மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். 

முல்லைத்தீவு – நாயாற்று பகுதியில், வாடிகள் எரிக்கப்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நேற்று புதன்கிழமை மீன்பிடி வலைகளை வழங்கி வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய சுவாமிநாதன், “2014ஆம் ஆண்டில் இருந்து கிளிநொச்சிக்கு மழை பெய்வதில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அதற்கு இங்கு பெரிய பூசையொன்றை நடத்தி, யாகம் ஒன்றை வைத்து, வர்ணபகவானுக்கு பூசை செய்ய வேண்டும் என அந்த மக்களிடம் நான் தெரிவித்துள்ளேன். அதற்கான திகதியொன்றை குருக்கள் அவர்களுடன் தொடர்புகொண்டு குறித்துக் கொண்டுள்ளேன்.” என்றுள்ளார்.