இலங்கை

எந்தவிதமான சவால்கள் வந்தாலும் நாட்டைப் பாதுகாத்து அபிவிருத்தி செய்யும் மூலநோக்கத்துடன் சமகால நல்லாட்சி அரசாங்கம் செயற்பட்டு வருவருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

மொனராகலையில் நேற்று புதன்கிழமை என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா தேசிய கண்காட்சியை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “2015ஆம் ஆண்டில் மாற்றத்திற்காக வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அரசாங்கம் பாடுபடுகின்றது. இது என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் மூலம் தெளிவாகின்றது. தெளிவாக உணரக்கூடிய மாற்றத்தை கிராமப்புறங்களுக்கும் கொண்டு செல்வதற்கு என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா திட்டத்திற்கு ஆற்றல் கிடைத்திருக்கின்றது.” என்றுள்ளார்.