இலங்கை

“அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள், கட்சியின் வருடாந்த கூட்டத்துக்கு முன்னர், அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும். இல்லாதுபோனால், எதிரணியில் உள்ளவர்களுடன் இணைந்து சுதந்திரக் கட்சியைக் கைப்பற்றும் நடவடிக்கையை முன்னெடுப்போம்.” என்று அரசாங்கத்திலிருந்து விலகிய சுதந்திரக் கட்சியின் 16 பேர் குழு அறிவித்துள்ளது. 

கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே சுதந்திரக் கட்சியின் 16 பேர் குழுவின் முக்கியஸ்தரும் பாராளுமன்ற உறுப்பினருமான டிலான் பெரேரா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் புனரமைப்பு நடவடிக்கையின் போது சுதந்திரக் கட்சி அவசியம் அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும். தற்பொழுது, பிரேரணை ஒன்றினூடாக இந்த விடயம் மத்திய செயற்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.