இலங்கை

அரசாங்கங்களை கவிழ்க்கும் சூழ்ச்சிகளில் சக்திவாய்ந்த சில பெரு நிறுவனக் குழுக்கள் ஈடுபடுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் நேற்று வியாழக்கிழமை ஆரம்பமான பிம்ஸ்ரெக் நாடுகளின் தலைவர்களின் நான்காவது மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மேலும் கூறியுள்ளதாவது, “சில சக்திவாய்ந்த பெரு நிறுவனக் குழுக்கள் அரசாங்கங்களை கவிழ்ப்பதில் சிலவேளைகளில் வெற்றிபெற்றிருக்கின்றன. எனவே, இந்தப் பெரு நிறுவனக் குழுக்கள் விடயத்தில், நாடுகளின் தலைவர்கள் விழிப்பாக இருக்க வேண்டும். உலக சமூதாயத்தின் முன்னேற்றத்துக்கு போதைப்பொருள் ஒரு பெரிய தடையாக மாறியிருக்கிறது. போதைப் பொருள் கடத்தல்களை தடுப்பதில் நாடுகள் ஒன்றிணைய வேண்டும்.” என்றுள்ளார்.