இலங்கை
Typography

தீவிரவாதச் செயற்பாட்டில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு இலங்கை பிரஜை ஒருவர் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகச் செய்திகள் தெரிவித்துள்ளன. 

25 வயதுடைய இளைஞர் ஒருவரே அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருடைய மாணவர் விசா செப்டம்பர் மாதம் காலாவதியாக உள்ளதாகவும், சிட்னியிலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் பணியாற்றக் கூடியவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தாக்குதல்களுக்கான திட்டங்களைக் கொண்டுள்ளதாகவும், அது தொடர்பான ஆவணம் ஒன்று அவரிடம் இருந்துள்ளதாகவும் அந்த இளைஞர் மீது அவுஸ்திரேலிய பொலிஸார் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

எவ்வாறாயினும் கைது செய்யப்பட்ட அவருக்கு எதிராக எவ்வித பயங்கரவாத குற்றச்சாட்டுக்களும் இதற்கு முன்னர் சுமத்தப்படவில்லை என்று அந்த நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்