இலங்கை

தமிழ் மக்களுக்கு சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்று அவசியம் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “அரசியலமைப்பில் தமது கருத்துக்களுக்கு இடமளிக்கப்படவில்லை என்பதாலேயே தமிழ் மக்கள் பிரிந்து செல்வதாக முன்னர் அறிவிக்கப்பட்டது. அரசியலமைப்பின் ஊடாகவே இந்த பிரச்சினையை தீர்க்க முடியும். புதிய அரசியலமைப்பை முன்வைப்பதன் மூலம் பல அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். எனினும் இது பிரச்சினை தீர்வுக்கான அத்திவாரமாக மாத்திரமே அமையும்.

இலங்கை சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், ஒரே நாட்டுக்குள் வாழ்வதற்கான இணக்கப்பாட்டை தமிழ் மக்கள் இன்னும் தெரிவிக்காதுள்ளனர். சமஷ்டி முறையிலான தீர்வு ஒன்று வழங்கப்பட வேண்டுமா என கேட்கிறார்கள். ஆனால், அப்படி ஒரு தீர்வு அவசியம் இல்லை. மாகாண சபை முறைமையை சற்று மாற்றிக் கொண்டு ஒரே நாட்டுக்குள் வாழ எமது மக்கள் தயாராக இருக்கின்றனர்.” என்றுள்ளார்.

இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் குறித்து ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரெஸ் கவலை வெளியிட்டுள்ளார். 

இந்து சமுத்திரம் அனைத்து நாடுகளுக்கும் திறந்த மற்றும் சுதந்திர வலயமாக அமைய வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

கொரோனா ஊரடங்கில் 5-வது கட்ட தளர்வுகளை அறிவித்தது இந்திய அரசு. அதில் திரையரங்குகளை அக்டோபர் 15-ஆம் திகதி முதல் 50 % இருக்கைகளை பார்வையாளர்களைக் கொண்டு நிரப்பி மீண்டும் நடத்தத் தொடங்கலாம், காட்சிகளைத் திரையிடலாம் என்று அறிவித்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், ஹத்ரஸ் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த 19 வயது இளம்பெண், தனது தாயுடன் வயலுக்கு கடந்த 14ம் திகதி  சென்றபின்திடீரென காணாமல் போனார்.

உலகளாவிய கோவிட்-19 தொற்று இறப்புக்கள் சமீபத்தில் 10 இலட்சத்தைத் தாண்டியுள்ள நிலையில் இந்தப் புள்ளிவிபரம் மிகவும் எதிர்பாராததும், வேதனை மிக்க மைல்கல் என்றும் ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோனியோ கட்டரஸ் கவலை தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்து மக்கள் தங்கள் ஜனநாயக உரிமையினை மீண்டும் ஒருமுறை நாட்டு நலனை முன்னிறுத்திச் சரியாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.