இலங்கை

இன்றைய ஆட்சியில் பிக்குகளும், பௌத்த மதமும் வேட்டையாடப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். 

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “எதிர்வரும் 05ஆம் திகதி கொழும்பில் வரலாறு காணாத சனக் கூட்டம் ஒன்றை கண்டுகொள்ளலாம். இந்த ஆர்ப்பாட்டம் எங்கு நடைபெறும் என்பது குறித்து நாம் இதுவரை அறிவிக்கவில்லை. ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ள தினத்துக்கு முந்திய தினத்தன்றே ஊடகங்களுக்கு அறிவிக்கவுள்ளோம். நாம் முன்னதாகவே இடத்தை அறிவித்தால், அதற்கு அரசாங்கம் தடைகளை ஏற்படுத்தும். தடை உத்தரவுகளையும் நீதிமன்றத்திடம் பெற்றுக் கொள்ளும்.” என்றுள்ளார்.