இலங்கை

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மாத்திரமே நாட்டின் தலைவராகும் தகுதியுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவை தவிர்த்து, ராஜபக்ஷ குடும்பத்தில் உள்ள வேறு எந்தவொரு ராஜபக்ஷக்களுக்கும் நான் ஆதரவு வழங்கப்போவதில்லை.” என்று கூட்டு எதிரணி முக்கியஸ்தரும் பாராளுமன்ற உறுப்பினருமான குமார் வெல்கம தெரிவித்துள்ளார். 

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கூட்டு எதிரணியின் வேட்பாளராக அறிவித்தால், அவருக்கு ஆதரவு வழங்குவீர்களா என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே குமார் வெல்கம மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.