இலங்கை

‘வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தன் பக்க நியாயங்களைப் பட்டியலிட்டுள்ளார். எமது பக்க நியாயங்களையும் நாங்கள் பட்டியலிட வேண்டும். ஆனாலும், அதனை அவசரப்பட்டு செய்ய முடியாது. உரிய நேரத்தில் விக்னேஸ்வரனுக்கு பதில் வழங்குவோம்.’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை தோல்வியடைந்துவிட்டதாக சி.வி.விக்னேஸ்வரன் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்த நிலையிலேயே, இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்கி, முதலமைச்சராக்கியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. இவ்வாறான நிலையில், கூட்டமைப்பின் தலைமையை விமர்சித்து தன்னுடைய பக்க நியாயங்களை அவர் பேசியிருக்கின்றார். எமக்கும் எமது பக்க நியாயங்கள் இருக்கின்றன. உரிய நேரத்தில் பதிலை வழங்குவோம்.” என்றுள்ளார்.