இலங்கை
Typography

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் நிலவும் அரசியல் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான தீவிர முயற்சியொன்று முன்னெடுக்கப்படுகின்றது. 

அவ்வாறானதொரு முயற்சியில், மக்கள் வங்கியின் தலைவர் ஹேமசிறி பெர்ணான்டோ ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

ஹேமசிறி பெர்ணான்டோ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகிய இருவருடனும் மிகவும் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருப்பதால், இருவருக்கும் இடையில், சமரச முயற்சியொன்றை மேற்கொள்ளுமாறு, ஐக்கிய தேசியக் கட்சியே ஹேமசிறியிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளதாகவும் அந்தத் தகவல் தெரிவித்தது.

முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் செயலாளராகக் கடமையாற்றிய அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின், பயணியாட் தொகுதியின் பிரதானியாக நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளார் என்றும் அறியமுடிகின்றது. இதேவேளை, மக்கள் வங்கியில் தனது செயற்பாடுகளை மிகவும் வெற்றிகரமாக முன்னெடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹேமசிறியின் நீண்டகால அரசியல் அனுபவமும், சிறந்த தொடர்புகள் காரணமாக, வழங்கப்படும் கடமைகளை பொறுப்புடன் அவர் செய்வார் என்பது சகல தரப்பினரின் அபிப்பிராயங்களாகும். இந்த நிலையில், பணியாட் தொகுதியின் பிரதானியாக அவரை நியமிக்குமாறு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

புதிய சிறுவர் கதை சொல்லி தமிழில் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்