இலங்கை

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து எங்களை விரட்டிவிட்டார்கள். அதன் பின்னரே, நாங்கள் பொதுஜன பெரமுனவை ஆரம்பித்தோம்.” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

எதிர்வரும் 05ஆம் திகதி நடைபெறவுள்ள ‘மக்கள் சக்தி’ ஆர்ப்பாட்ட பேரணி தற்போதைய அரசாங்கத்தை விரட்டுவதற்கான முதல் கட்ட நடவடிக்கை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றின் போதே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.