இலங்கை
Typography

வடக்கு- கிழக்கிற்கு அப்பாலுள்ள கடல் பகுதிகளில் உள்ள இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் வளங்களை கண்டறிவதற்கான ஆய்வுகள் மீண்டும் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய வளங்கள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். 

உலகளவில் பிரபலமான Schulumberger என்ற நிறுவனமே இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ளது. கொழும்பு துறைமுக கிழக்கு கொள்கலன் முனையத்தில் இந்த ஆய்வை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்த ஆய்வுக்காக, பனாமா நாட்டுக் கொடியுடன் BGP-Pioneer என்ற கப்பல் கொழும்பு வந்துள்ளது.

இந்தக் கப்பல் வடக்கு, கிழக்கிற்கு அப்பாலுள்ள கடல் பகுதிகளில் 45 நாட்கள் ஆய்வுகளில் ஈடுபட்டு தரவுகளை சேகரிக்கும். 10 ஆயிரம் சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் இந்தக் கப்பல் தரவுகளைச் சேகரித்து, அதனை மலேசியாவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கும். அங்கு பகுப்பாய்வு செய்யப்படும் தரவுகளின் அடிப்படையில் இறுதி அறிக்கை தயாரிக்கப்படும்.

BLOG COMMENTS POWERED BY DISQUS