இலங்கை
Typography

“இந்து சமுத்திரத்தின் கேந்திர நிலையமாக எமது நாடு அமைந்துள்ளமையினால், 2021ஆம் ஆண்டளவில் இந்து சமுத்திர பிராந்திய நாடுகளில் இலங்கை பாரிய முக்கியத்துவத்தினைப் பெறும்” என்று மாநகர அபிவிருத்தி அமைச்சர் பட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 

எமது நாட்டை முன்னேற்றுவதற்கு பூகோள மற்றும் பொருளாதார அடிப்படையிலான சிறப்பியல்பினை கண்டறிய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே பட்டாலி சம்பிக்க ரணவக்க இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “எமது நாடு இன்னமும் நடுத்தர வருமானம் பெறும் நாடு எனும் பட்டியலிலேயே உள்ளது. 2045ஆம் ஆண்டளவிலேயே உயர் வருமானம் பெறும் நாடாக எமது நாடு மாற்றமடையும். நடுத்தர வருமானம் பெறும் நாடாக நாம் சிக்கியிருக்கும் சவாலை வென்றெடுப்பதற்கு எமது பௌதீக, உட்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்த வேண்டும்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS