இலங்கை
Typography

‘கடந்த ஆட்சியில் கொள்ளையடித்த பணத்தில் மக்களுக்கு உண்ணவும் குடிக்கவும் கொடுத்து, கொழும்புக்கு அழைத்து வந்து ஆர்ப்பாட்டம் செய்வதால் தற்போதையை அரசாங்கத்துக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது’ என்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 

கூட்டு எதிரணியினருக்கு சார்பாக சில ஊடகங்கள் செயற்பட்டு வந்தாலும், அது அரசாங்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டு எதிரணியினர் நாளை 05ஆம் திகதி நடத்த திட்டமிட்டிருக்கும் ஆர்ப்பாட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்டபோதே அமைச்சர் மங்கள சமரவீர இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “தற்போதைய அரசாங்கம் அனைவருக்கும் தமது கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரத்தை வழங்கியுள்ளது. அதற்காக ஆர்ப்பாட்டம் செய்து அரசாங்கத்தை கவிழ்க்க முடியுமென எடை போட்டால் அது முற்றிலும் தவறு. எதிரணியினர் முன்னெடுக்கவுள்ள ஆர்ப்பாட்டத்தினால் அப்பாவி மக்கள் அசெளகரியங்களை எதிர்கொள்ள நேரிடுமே தவிர, அது எவ்வகையிலும் அரசாங்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது.

கடந்த அரசாங்கத்தின்போது கொள்ளையடித்த பணத்தைக் கொண்டே இவர்கள் ஆர்ப்பாட்டத்துக்காக ஆட்களை திரட்டுகிறார்கள். அப்பாவி மக்களை ஏமாற்றி அவர்களை கொழும்புக்கு அழைத்து வந்து, தமக்கு ஆட்பலம் இருப்பதாக எதிரணியினர் காட்ட முயற்சிக்கின்றார்கள். எது எவ்வாறானாலும் எதிரணியினரின் இந்த ஆர்ப்பாட்டத்தால் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்