இலங்கை
Typography

யாழ். மாவட்டத்தில் பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளில் இன்னும் 4,500 ஏக்கர் காணிகள் இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ளதாக யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தெரிவித்துள்ளார். 

மேலும், எதிர்வரும் ஆண்டுகளில் இந்த காணிகள் விடுவிக்கப்படலாம் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

பாராளுமன்ற நிதிக்குழுவின் கூட்டம், யாழ். மாவட்ட செயலகத்தில், குழுவின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டிருந்த சுப்பிரமணியம் முரளிதரன், மீள்குடியேற்றம், நிதி ஒதுக்கீடு மற்றும் உட்கட்டமைப்பு உள்ளிட்டவை பற்றி எடுத்துரைத்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS