இலங்கை

வடக்கில் 25,000 நிரந்தர கல் வீடுகள் நிர்மாணிக்கும் பணிகள் எதிர்வரும் 2 அல்லது 3 வாரங்களில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு- கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி விசேட செயலணியின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்துள்ளார். 

இதற்கான ஒப்பந்தக்காரர்களை தெரிவு செய்யும் நடவடிக்கை நிறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை அண்டிய கலைமகள் மகா வித்தியாலயத்தை இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு யாழ். மாவட்ட பாதுகாப்பு கட்டளை தளபதிக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்தார். இதன் பிரகாரம் இப்பாடசாலை பாதுகாப்பு கட்டளைத் தளபதியினால் செப்டம்பர் 06ஆம் திகதி யாழ். மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகனிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஏற்கெனவே 683 ஏக்கர் காணிகள் மயிலிட்டியை அண்டிய பிரதேசங்களில் விடுவிக்கப்பட்டிருப்பதால், அங்கு மீள்குடியேறும் பாடசாலை மாணவர்களுக்கு இது முக்கியமாக அமையும். இது தொடர்பாக கடந்த 27 ஆம் திகதி ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்ற வடக்கு- கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி விசேட செயலணி கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கான 50,000 வீடுகளில் 25,000 வீடுகள் தொடர்பான கேள்விகோரல்கள் முடிவடைந்து அதனடிப்படையில் UNHABITAT, UNOPS நிறுவனங்கள் தெரிவுசெய்யப்பட்டு கட்டுமானப்பணிகளை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒப்பந்தக்காரர்களை தெரிவுசெய்யும் கடினமான செயற்பாடு முடிவுக்கு வந்தமையால், இத்திட்டத்தை விரைவாக அமுலாக்கும் செயன்முறை எதிர்வரும் 2 அல்லது 3 வாரங்களுக்குள் முன்னெடுக்கப்படும். இது ஒரு நிரந்தரமான கல்வீட்டுத்திட்டம் எனவும் செயலாளர் சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

1847 கிலோ மீ்ற்றர் நீளமான வீதிகளை அமைக்கும் வேலைத்திட்டம் தொடர்பாக கேள்வி கோரல் செயன்முறைகள் முடிவுறுத்தப்பட்டு அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெறுவதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மன்னார், மடு தேவாலய பிரதேசத்தில் யாத்திரிகர்களுக்கான ஓய்வு விடுதிகளை நிர்மாணிப்பதற்கான செயற்பாடுகள் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வடக்கு- கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி விசேட செயலணியின் அடுத்த கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஒக்டோபர் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெறவுள்ளது.

இது வடக்கு- கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வை வழங்கும் ஒரு பொறிமுறையாக அமைவதுடன் அனைத்து அமைச்சர்கள் மற்றும் வடக்கு- கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களினதும் பங்குபற்றுதலுடன் இடம்பெறவுள்ளது.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

கொரோனா நோய்த் தொற்று உலகிலிருந்து ஒழிக்கப்படும் வரை அவ்வப்போது நாட்டில் எழக்கூடிய நோய்த் தொற்று பரவும் அபாயத்தை கட்டுப்படுத்தி மக்களை பாதுகாக்கும் சவாலை வெற்றிகொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி கோயில் வருடாந்தத் திருவிழாவில் 300 பக்தர்களையேனும் ஆலய வளாகத்துக்குள் அனுமதிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவின் பிரசித்திபெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலின் 15 அர்ச்சகர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியா அசாமில் பருவமழை பெய்ததையடுத்து பெருவெள்ளம் ஏற்பட்டத்தில் 59பேர் வரை பலியாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் முக்கிய புள்ளிகளின் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், கொரோனா வைரஸ் தொற்றுத் தாக்கம் இருந்தபோதும், சுவிஸின் பீரங்கித் தயாரிப்பு மற்றும் ஆயுத ஏற்றுமதியில் எதிர்மறையான தாக்கம் இல்லையென புள்ளி விபரங்கள் தெரிவிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.