இலங்கை

சி.வி.விக்னேஸ்வரனை வடக்கு மாகாண முதலமைச்சராக நீடிக்க விட்டமை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை செய்த தவறு என்று கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் நேற்று திங்கட்கிழமை ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை தவறிழைத்துள்ளது என வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியிருக்கிறாரே, அது தொடர்பில் உங்கள் கருத்து என்ன? என்று கேட்ட போதே சுமந்திரன் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “எங்கள் கட்சியின் பெயரே சமஷ்டிக் கட்சி. அண்ணண் மாவை சேனாதிராஜாவுக்கு எதிராக உயர்நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கில் வாதாடியவன் நான். அந்த வழக்கில் எங்களுக்கு ஒரு தீர்ப்பு கொடுக்கப்பட்டிருந்தது. அவ்வாறு உயர்நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட தீர்ப்பு ‘சமஷ்டியை இவர்கள் கோர முடியும்’ என்றுதான் வந்திருக்கின்றது.

அந்தத் தீர்ப்பு வந்த கையோடு முதலமைச்சர் விக்னேஸ்வரன் அந்தத் தீர்ப்பின் பிரதிகளைக் கையில் எடுத்துக் கொண்டு கண்டியில் உள்ள மகாநாயக்க தேரர்களை ஓடிப் போய்ச் சந்தித்தார். தீர்ப்பை அவர்களிடம் கொடுத்தார். அது சிலருக்கு ஞாபகம் இருக்கலாம். அதனைக் கொடுத்து இது அருமையான தீர்ப்பு என்றும், இதனை உங்கள் உயர்நீதிமன்றமே சொல்லியிருக்கிறது என்றும் கூறியிருந்தார்.

நாங்கள் சமஷ்டியைக் கோர முடியுமென்று கூறி தீர்ப்பைத் தேரர்களிடம் கொண்டு சென்று கொடுத்தவர்தான் முதலமைச்சர். ஆனால், அந்தத் தீர்ப்பைக் கொண்டுபோய் கொடுப்பதற்கு ஒரு தபால்காரர் போதும். ஆனால், நீதிமன்றத்தில் வாதாடுவதை ஒரு தபால்காரர் செய்ய முடியாது. நான் செய்தது நீதிமன்றில் வாதாடி அந்தத் தீர்ப்பைப் பெற்றது. ஒரு தபால்காரர் செய்கின்ற வேலையை நான் செய்யவில்லை.

நான் வாதாடிப் பெற்ற தீர்ப்பை நல்ல தீர்ப்பென்று ஓடிப் போய் அங்கு கொடுத்தவர். இன்றைக்கு எனக்கு சமஷ்டியைப் பற்றிப் போதிப்பதற்குத் தலைப்பட்டிருக்கிறார். இதுதான் இன்றுள்ள துரதிஷ்டவசமான நிலைப்பாடு.

கூட்டமைப்பின் தலைமை தவறிழைத்திருக்கிறதென்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறுகின்றார். என்னைப் பொறுத்தவரை அவரை முதலமைச்சராக நீடிக்கவிட்டதுதான் கூட்டமைப்பின் தலைமை செய்த தவறு.”என்றுள்ளார்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

கொரோனா நோய்த் தொற்று உலகிலிருந்து ஒழிக்கப்படும் வரை அவ்வப்போது நாட்டில் எழக்கூடிய நோய்த் தொற்று பரவும் அபாயத்தை கட்டுப்படுத்தி மக்களை பாதுகாக்கும் சவாலை வெற்றிகொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி கோயில் வருடாந்தத் திருவிழாவில் 300 பக்தர்களையேனும் ஆலய வளாகத்துக்குள் அனுமதிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவின் பிரசித்திபெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலின் 15 அர்ச்சகர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியா அசாமில் பருவமழை பெய்ததையடுத்து பெருவெள்ளம் ஏற்பட்டத்தில் 59பேர் வரை பலியாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் முக்கிய புள்ளிகளின் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், கொரோனா வைரஸ் தொற்றுத் தாக்கம் இருந்தபோதும், சுவிஸின் பீரங்கித் தயாரிப்பு மற்றும் ஆயுத ஏற்றுமதியில் எதிர்மறையான தாக்கம் இல்லையென புள்ளி விபரங்கள் தெரிவிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.