இலங்கை

கடந்த காலத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான தகவல்களை கண்டறிவதற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள, காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தின் இடைக்கால அறிக்கை நேற்று புதன்கிழமை முற்பகல் பாராளுமன்றத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது. 

காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸினால் அவ்வறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

ஆறு மாத காலமாக இடம்பெற்ற விசாரணைகளுக்கு அமைய தயாரிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையே இவ்வாறு ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

‘பொதுத் தேர்தலுக்குப் பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக்கொள்வார்’ என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

“நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை ஆரம்பமாகிவிட்டது. ஆனால், அரசாங்கம் அதனை மறைத்துக் கொண்டு, மக்களை ஆபத்துக்குள் தள்ளுகிறது.” என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

இந்தியா அசாமில் பருவமழை பெய்ததையடுத்து பெருவெள்ளம் ஏற்பட்டத்தில் 59பேர் வரை பலியாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா நோய்த்தொற்று வேகத்தால் இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 9 லட்சத்தை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Worldometer இணையத் தளத்தின் சமீபத்திய கொரோனா புள்ளிவிபரம் :

இத்தாலியில் தற்போது பயணம் மேற்கொள்ளும் போது கவனத்திற் கொள்ள வேண்டிய பல நடைமுறைகள், விதிகள் உள்ளன. இத்தாலியின் கொரோனா வைரஸ் தொற்றுக்காக மேற்கொண்டிருந்த இறுக்கமான நடைமுறை விதிகள் கண்டிப்பானவை.