இலங்கை
Typography

‘நாட்டினைப் பிளவுபடுத்தும் நடவடிக்கைகளில் தற்போதைய அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. எனவே, அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு நாட்டு மக்கள் ஒருங்கிணைய வேண்டும்’ என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். 

கூட்டு எதிரணியால் (மஹிந்த அணி) ‘மக்கள் சக்தி கொழும்புக்கு’ எனும் ஆர்ப்பாட்டப் பேரணி நேற்று புதன்கிழமை நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது, “நாட்டிலுள்ள மக்கள் அனைவரும் தற்போது கஷ்டங்களுக்கு உள்ளாகி இருக்கின்றனர். நாட்டை பிளவுபடுத்தும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது. நாட்டில் ஜனாநாயகம் முற்றாக இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது.

தற்போது மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு கூட அரசாங்கத்தால் முடியாதுள்ளது. எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் மக்களுடன் ஒன்றிணைந்து இன்று வீதியில் இறங்கி இருப்பது ஆட்சியை கவிழ்க்கவே. அதற்கு அனைவரும் ஒன்று சேர வேண்டும்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS