இலங்கை

அதிகாரத்தைக் கைப்பற்றப் போவதாகக் கூறிக்கொண்டு மக்கள் பேரணியை திரட்டிவந்தபோதும் கூட்டு எதிரணியினரால் (மஹிந்த அணி) அதனைச் சாதிக்க முடியாது போனதாகவும், ஒரே இரவுக்குள் அவர்களது போராட்டம் சுருண்டுவிட்டதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

கூட்டு எதிரணியினரின் மக்கள் பேரணியால் எந்தவொரு வரலாற்றுத் திருப்பத்தையும் ஏற்படுத்த முடியாது, அந்தப் போராட்டம் வெறும் காற்றுப்போன பலூனாகி விட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“வளம் கொழிக்கும் பொருளாதார பலம்கொண்ட நாடாக இலங்கையை 2025ஆம் ஆண்டாகும்போது மாற்றியமைக்கும் இலக்கு நோக்கிய பயணத்தை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இந்த இலக்கை வெற்றி கொள்ளும் வகையில், ஐக்கிய தேசியக் கட்சியை வலிமை மிக்க கட்சியாக மாற்றியமைக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.” என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் 72வது வருடாந்த மாநாடு நேற்று வியாழக்கிழமை கட்சித் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் நடைபெற்றபோது, ஆற்றிய பிரதான உரையின்போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளை சில ஊடகங்கள் மூடிமறைக்கின்றன. வீடமைப்பு அமைச்சர் 138 வீடமைப்புத் திட்டங்களை அன்றைய தினம் திறந்துவைத்தபோதும் அவற்றை ஊடகங்கள் கண்டுகொள்ளத் தவறிவிட்டன. ஊடகங்களால் ஐக்கிய தேசியக் கட்சியை அழித்துவிட முடியாது. 72 வருடகாலப் பயணத்தின்போது கட்சியை அழிப்பதற்கு பல பிரயத்தனங்கள் எடுக்கப்பட்டபோதிலும் அது சாத்தியப்படவே இல்லை. ஜனநாயக விழுமியங்களை தன்னகத்தே கொண்டிருக்கும் ஒரு கட்சியாகவே ஐக்கிய தேசியக் கட்சி காணப்படுகின்றது.

1946ஆம் ஆண்டு செப்டெம்பர் 6ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கட்சி எமது கட்சி அக்கால கட்டத்தில் வேறு சில கட்சிகளும் காணப்பட்டன. ஆனால் மீதமாக இருப்பதும் பலம் கொண்டதுமான கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சி மட்டுமே காணப்படுகின்றது. இக்கட்சியின் உறுப்பினர்களாக நாம் இருப்பதையிட்டு பெருமைப்பட முடிகிறது.

தேசிய அரசாக 2015இல் ஐ.தே.க அதிகாரத்துக்கு வந்த நிலையில் கடன் சிக்கலுக்குள் இறுகிய நிலையிலேயே ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டோம். ஆனால் கடன் சுமையைக் கொண்ட பொருளாதாரத்தையன்றி கடனைத் திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதாரக் கட்டமைப்பை எமது எதிர்காலம் பரம்பரையினருக்குப் பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கமாகும்.

கைவிடப்பட்ட வயல் போன்ற நாட்டையே 2015இல் பொறுப்பேற்றோம் மூன்றாண்டு காலத்தில் நல்ல விளைச்சலைக் கொண்ட பசுமையான வயல் வெளி போன்று மாற்றியமைக்க முடிந்துள்ளது. இது தான் எமது எதிர்பார்ப்பாகும். அன்று 1946இல் கட்சியை ஆரம்பித்தபோது முதலாவது தலைவரும், பிரதமருமான டி.எஸ்.சேனாநாயக்க சொன்ன வார்த்தைகளை நாம் மீட்டிப்பார்க்கின்றோம். நாட்டை ஜனநாயக வழியில் முன்னெடுத்துச் செல்வதும் மக்களை சுபீட்சமாக வாழவைப்பதுவே அன்னாரது தூர நோக்காகிக்காணப்பட்டது.

எமது கட்சி தோல்விகளைக் கண்டு பயந்து ஓடியொழியும் கட்சியல்ல. வெற்றியின்போது நல்லாட்சியை முன்னெடுப்பதோடு தோல்வியின்போது ஜனநாயகத்தைப் பாதுகாப்பதுமே எமது சித்தாத்தமாகும். நாம் கடந்த காலங்களில் பல சவால்களுக்கு முகம்கொடுத்துள்ளோம். ஆனால் அவற்றைக் கண்டு துவண்டுபோகவில்லை. சவால்களுக்கு முகம்கொடுக்கும் பலம் எம்மிடமுண்டு. 2015இல் ஆட்சிமாற்றம் ஏற்பட்டிராவிட்டால் நாட்டின் இன்றைய நிலை எவ்வாறாக அமைந்திருக்கும் என்பதை நினைத்துப்பார்க்க முடியாது.

அரசாங்கத்தை சரியான பாதையில் முன்னெடுப்பது போன்று கட்சியையும் ஜனநாயக வழியில் கட்டமைத்து எமது எதிர்பார்ப்பை புதிய பரம்பரையிடம் ஒப்படைப்போம். புதிய தலைமைத்துவ சபை அதற்கான பணிகளை முன்னெடுத்து வருகின்றது.

கடந்த உள்ளூராட்சித் தேர்தலின்போது எமது கட்சி பின்னடைவைக் கண்டது. கட்சி ஆதரவாளர்களை கவனிக்கத்தவறியமையே அதற்கான காரணமாகும். இனிமேல் அதற்கு இடமளிக்கப்படமாட்டாது. கட்சிக்காக தியாகம் செய்துவரும் ஆதரவாளர்களை இனியொருபோதும் கைவிடமாட்டோம். அவர்களுக்கு எது கிடைக்கவேண்டுமோ அதனை கூடிய விரைவில் பெற்றுக்கொடுப்போம்.

2020இல் தனியான ஆட்சியை நிறுவி 2025இல் தன்னிறைவு கொண்ட விழிப்பான நாடாக மாற்றியமைத்துககொண்டு 2030 வரை தொடர்ந்து ஆட்சிப் பயணத்தைத் தொடர்வோம். யார் என்ன சொன்னாலும், நாட்டை அழிவுப்பாதையில் இட்டுச் செல்ல எவருக்கும் இடமளிக்கப்போவதில்லை.” என்றுள்ளார்.

வடக்கு – கிழக்கு உள்ளிட்ட தமிழ் மக்கள் அதிகமுள்ள பகுதிகளில் தடைப்பட்டுப் போன அபிவிருத்தித் திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டு துரிதப்படுத்தப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

அமைச்சரவை அமைச்சர்கள் 28 பேரும், இராஜாங்க அமைச்சர்கள் 40 பேரும் நாளை புதன்கிழமை பதவியேற்கவுள்ளனர். 

டெல்லி உச்சநீதிமன்றத்தால் பூர்வீக சொத்து உரிமையில் சம பங்கு பெண் பிள்ளைகளும் பெறலாம் எனும் தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

இந்தியாவில் பருவமழை காலம் என்பதால் பவானிசாகர் மற்றும் மேட்டூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வடைந்து வருகிறது.

பசுபிக் பெருங்கடலில் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்த இந்தோனேசியா உலகில் நிலநடுக்கங்கள், சுனாமி மற்றும் எரிமலை போன்ற அனர்த்தங்கள் ஒரு வருடத்தில் அதிகளவில் ஏற்படும் நாடுகளில் ஒன்றாகும்.

அண்மையில் பெய்ரூட்டில் நடந்த வெடி விபத்தை அடுத்து லெபனானில் வெடித்த மக்கள் புரட்சியின் விளைவாக லெபனான் அரசின் பிரதமரான தானும், அமைச்சரவையும் பதவி விலகுவதாக அந்நாட்டு பிரதமர் ஹசன் தியாப் தொலைக் காட்சியில் அறிவித்துள்ளார்.