இலங்கை
Typography

மக்கள் சக்தி எதிர்ப்பு பேரணியின் இரண்டாம் கட்டத்தை கண்டியில் இருந்து ஆரம்பிக்க இருப்பதாக கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். 

இதுவரை இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற நீண்ட மற்றும் அதிக மக்கள் பங்கேற்ற மக்கள் பேரணி, அண்மையில் நடந்த ‘மக்கள் சக்தி கொழும்பிற்கு’ எதிர்ப்பு பேரணியாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த மஹிந்தானந்த அளுத்கமகே, மக்கள் சக்தி கொழும்பிற்கு எதிர்ப்பு பேரணி தொடர்ச்சியாக 12 மணி நேரம் இடம்பெற்றதென்று கூறியுள்ளார்.

பேரணியை தடுத்து நிறுத்துவதற்கு அரசாங்கம் பல முயற்சிகள் எடுத்த போதிலும் அது வெற்றியளிக்கவில்லை. சுமார் இரண்டு இலட்சம் பேர் வரை பேரணியில் கலந்துகொண்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்