இலங்கை

இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக அலாய்னா பி டெப்லிட்ஸ் (Alaina B Teplitz) நியமிக்கப்பட்டுள்ளார். 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த மே மாதம் 25ஆம் திகதி இந்த நியமனத்தை வழங்கியிருந்த நிலையில், நேற்று வியாழக்கிழமை அமெரிக்க செனட் சபையில் இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வெளிவிவகார சேவையில் சிரேஷ்டத்துவம் உள்ளவராக அறியப்படும் அலாய்னா பி டெப்லிட்ஸ், அமெரிக்க அரசுத்துறை திணைக்களத்தில் கடந்த 1991ஆம் ஆண்டு பணியில் இணைந்துள்ளார்.