இலங்கை

‘கூட்டு எதிரணியின் ‘மக்கள் சக்தி கொழும்புக்கு’ ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு பால் பக்கெட்டில் இன்ஜெக்ஷன் ஊசி மூலமாக எதையோ கலந்து கொடுத்துள்ளனர். முஜிபூர் ரஹ்மானே இதற்குக் காரணம், அதுவே எமது போராட்டம் சிதைவடையவும் காரணம்.’ என்று கூட்டு எதிரணி பாராளுமன்ற உறுப்பினரான விமல் வீரசங்ச குற்றஞ்சாட்டியுள்ளார். 

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை கணக்காய்வாளர் தலைமை அதிகாரியின் சம்பள அதிகரிப்பு தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தில் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முஜூபூர் ரஹ்மான் உரையாற்றினார்.

அப்போது, இடைமறித்த விமல் வீரவன்ச, “கடந்த ஐந்தாம் திகதி கூட்டு எதிரணி நடத்திய வெற்றிகரமான பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு மாளிகாவத்தை பகுதியில் அரசியல்வாதியின் ஆதரவாளர்கள் சிலர் மூலமாக பால் பக்கெட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பால் பக்கெட்டுக்களில் இன்ஜெக்ஷன் ஊசி மூலமாக எதோ கலக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இதனை பருகிய எமது ஆதரவாளர்கள் வைத்தியசாலைகளிலும் உள்ளனர். அரசாங்கம் மிகவும் மோசமான வகையில் இவற்றை செய்துள்ளது.” என்றுள்ளார்.

பொதுத் தேர்தலை ஜூன் மாதம் 20ஆம் திகதி நடத்துவதாக வெளியிடப்பட்ட வர்த்தமானியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 6 அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு எடுக்கமாலேயே உயர்நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்துள்ளது. 

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மஹேந்திரனை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக 21,000 கையொப்பங்களை தான் இட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இந்தியா எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை கொரோனா பாதிப்பு அபாயம் முழுவது நீங்கும் வரை திறக்கவேண்டாம் என 2 லட்சம் பெற்றோர் மனு அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

1963 ல் அமெரிக்காவின் ஒரு கறுப்பினத் தலைவன் மார்ட்டின் லூதர் கிங் "I Have a Dream" 'என்னிடம் ஒரு கனவு இருக்கிறது' என்ற வாசகம் உலகத்துக்கானது. 2008 ல் "Yes We Can" என்ற சுலோகத்துடன் அமெரிக்கத் தலைமை ஏற்றார் ஒபாமா எனும் கறுப்பினத் தலைவர்.

Worldometers இணையத்தளத்தின் சமீபத்திய கொரோனா தொற்று புள்ளிவிபரம் :