இலங்கை

“அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கான நீதியை இலங்கை அரசிடமிருந்து எதிர்பார்க்க முடியாது. ஆகவே, எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு சர்வதேசத்தின் பங்களிப்புடன் நீதியைக் கோருவோம்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். 

பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை செய்யப்பட்ட 22வது நினைவு தினம் நேற்று வெள்ளிக்கிழமை யாழ். செம்மணி பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தர்மலிங்கம் சித்தார்த்தன் மேலும் கூறியுள்ளதாவது, “பாடசாலை மாணவி கிருஷாந்தி மட்டுமல்ல கிருஷாந்தி போன்று பலர் அநியாயமாக கொல்லப்பட்டுள்ளனர். யுத்தத்துடன் எந்தவித சம்பந்தமும் இல்லாத கிருஷாந்தி மட்டுமன்றி பலர் கொல்லப்பட்டமை எமது இனத்திற்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதியாகும்.

இவ்வாறான கொலைகளுக்கு இந்நாட்டில் நிச்சயமாக நியாயம் கிடைக்காது. சர்வதேச ரீதியான பங்களிப்புடன் நீதியான விசாரணை இடம்பெற்றால் மட்டுமே அனைத்துக் கொலை களும் வெளியில் கொண்டு வரப்பட்டு எமது சமூகத்துக்கு நியாயம் கிடைக்கும். இவ்வாறான கொலைகளுக்கு நியாயம் கோரியே, இந்த அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.

இந்த நினைவு அஞ்சலி நிகழ்வுகளில் சிறு தொகையினர் பங்கு பற்றுவதனால், நியாயம் கிடைக்காமல் போகலாமெனச் சிலர் நினைக் கலாம். சிறு அளவிலான மக்களின் போராட்டமே ஐக்கிய நாடுகள் வரை சென்று நீதியைக் கோரி நிற்கின்றது. சர்வதேச நீதி விசாரணை வரும் வரையில் எமது போராட்டங்களில் இருந்து ஓயமாட்டோம்.” என்றுள்ளார்.

பொதுத் தேர்தலை ஜூன் மாதம் 20ஆம் திகதி நடத்துவதாக வெளியிடப்பட்ட வர்த்தமானியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 6 அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு எடுக்கமாலேயே உயர்நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்துள்ளது. 

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மஹேந்திரனை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக 21,000 கையொப்பங்களை தான் இட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இந்தியா எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை கொரோனா பாதிப்பு அபாயம் முழுவது நீங்கும் வரை திறக்கவேண்டாம் என 2 லட்சம் பெற்றோர் மனு அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

1963 ல் அமெரிக்காவின் ஒரு கறுப்பினத் தலைவன் மார்ட்டின் லூதர் கிங் "I Have a Dream" 'என்னிடம் ஒரு கனவு இருக்கிறது' என்ற வாசகம் உலகத்துக்கானது. 2008 ல் "Yes We Can" என்ற சுலோகத்துடன் அமெரிக்கத் தலைமை ஏற்றார் ஒபாமா எனும் கறுப்பினத் தலைவர்.

Worldometers இணையத்தளத்தின் சமீபத்திய கொரோனா தொற்று புள்ளிவிபரம் :