இலங்கை

“உரிய காலத்திற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்தப் போவதில்லை. அவ்வாறு நடத்துவதாயின், அதுபற்றிய தீர்மானமொன்றை என்னால் மட்டுமே மேற்கொள்ள முடியும்.” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இரத்னபுரியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மேலும் கூறியுள்ளதாவது, “ஜனாதிபதி தேர்தல் பற்றி இன்று நாட்டில் தேவையற்ற பரபரப்பொன்று ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. மிக விரைவில் ஜனாதிபதி தேர்தல் ஒன்றை பெற்றுத் தருவதாக சிலர் தெரிவித்து வருகின்றபோதும், உரிய காலத்திற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு நான் ஒருபோதும் தயாராக இல்லை. அவ்வாறு நடத்துவதாயின் அது பற்றிய தீர்மானமொன்றை எனக்கு மட்டுமே மேற்கொள்ள முடியும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும், ஐக்கிய தேசியக் கட்சியும் அரசியல் ரீதியாக மிகை மதிப்பீட்டை கொண்டிருந்தால், அது தவறு விடும் இடமாகும். தம்மைப்பற்றி தாமே எந்த மதிப்பீட்டை கொண்டிருந்தபோதும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உதவியின்றி தனித்து அரசாங்கத்தை உருவாக்க எவருக்கும் முடியாது என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.

தனி மனிதர்களை சுற்றி கட்டியெழுப்பப்படும் அரசியல் இயக்கம் தற்காலிகமானது. நாட்டுக்குத் தேவையாக இருப்பது கொள்கை சார்ந்த அரசியல் இயக்கமாகும். தாய் நாட்டைப் பற்றி உரிய கொள்கையும் தொலை நோக்குமுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறுவன பலத்தை அதிகரித்து, இன்று வெற்றிகரமாக முன்னோக்கிச் செல்கின்றது.

அரசியலமைப்பின் 19வது திருத்தத்திற்கேற்ப அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் ஜனாதிபதியின் அதிகாரங்கள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்குமென்றும் நாட்டின் முதன்மை பதவியாக பிரதமர் பதவியே இருக்கும். அந்த வகையில் அரசியல் துறையில் அனைவரினதும் கலந்துரையாடலுக்கு உள்ளாக வேண்டியது அடுத்து வரவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தலை பற்றியதாக அன்றி நாட்டுக்கு சிறந்த பிரதமர் ஒருவரை தெரிவு செய்வது பற்றியதாகும்.

தன்னைப் பற்றி எத்தகைய விமர்சனங்களை முன் வைத்தபோதும், அரசியல் ரீதியாக எதிர் தரப்பினர் எத்தகைய தாக்குதல்களை தொடுத்த போதும், எவருமே செய்யாத பணிகளை நான் நாட்டுக்காக செய்திருக்கின்றோம்.

உலகில் எந்தவொரு தலைவரும் செய்யாத வகையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவிக்குரிய எல்லையற்ற அதிகாரங்களை பாராளுமன்றத்திற்கு வழங்கி நாட்டின் ஜனநாயகத்தை பலப்படுத்தி சமுகத்தில் கீழ் மட்டத்தில் உள்ளவர்களும் உயர்ந்த இடத்திற்கு செல்லக்கூடிய பின்புலத்தை நான் உருவாக்கியுள்ளேன். பண்டாரநாயக்காவின் கொள்கையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கட்சிக் கொள்கையும் அதுவேயாகும். இந்த நாட்டுக்கு அந்த கொள்கையே என்றைக்கும் பொருத்தமானதாகும்.” என்றுள்ளார்.

அரச கணக்குகள் பற்றிய குழுவின் (CoPA) தலைவராக ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண நியமிக்கப்பட்டுள்ளார். 

‘20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக தற்போது கருத்து வெளியிடும் ஆளுங்கட்சியினர் இன்னும் சில வருடங்களில் இதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிவரும்.’ என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 

7 மாநில முதல் மந்திரிகளுடனான கொரோனா ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்துரையாடினார்.

இன்று அதிகாலை குஜராத்தில் உள்ள ஓ.என்.ஜி.சி ஆலையில் திடிரென தீ விபத்து ஏற்பட்டது.

கடந்த வியாழக்கிழமை ஐரோப்பிய யூனியன் தலைவர்களை புருஸ்ஸெல்ஸில் சந்தித்த நிலையில், தொடர்ந்து இழுபறியில் இருந்து வரும் பிரெக்ஸிட் விடயத்தில் தொடர்ந்து விளையாட வேண்டாம் என இலண்டனில் இருக்கும் பிரிட்டன் அதிகாரிகளிடம் ஜேர்மனியின் ஐரோப்பா விவகாரங்களுக்கான அமைச்சர் மைக்கேல் றொத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகின் வடதுருவத்துக்கு அருகே உள்ள கிறீன்லாந்து மற்றும் தென் துருவத்தின் அத்திலாந்திக் கடல் ஆகிய இடங்களில் இருக்கும் பனிப்பாறைகள் நிகழ்காலத்தில் அதிகரித்து வரும் உலக வெப்பமயமாக்கலினால் வேகமாக உருகி வருகின்றன.