இலங்கை

‘தற்போதைய அரசியலமைப்பில் உள்ளது போன்று புதிய அரசியலமைப்பிலும், பௌத்த மதத்துக்கு முன்னுரிமையும் அதனைப் பாதுகாப்பதற்கான அரசின் கடப்பாடும் உறுதி செய்யப்படும்’ என்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை உரையாற்றிய உதய கம்மன்பில, புதிய அரசியலமைப்பு வரைவில், பௌத்த மதத்துக்கான முன்னுரிமையையும் முதன்மை இடத்தையும் அரசாங்கம் நீக்கவுள்ளதாக குற்றஞ்சாட்டினார்.

இதற்குப் பதிலளித்த அவைத் தலைவரும் அமைச்சருமான, லக்ஸ்மன் கிரியெல்ல, “பௌத்தத்தை பாதுகாப்பதற்கு தற்போதுள்ள அரசியலமைப்பு விதிகளில் எந்த மாற்றமும் செய்யப்படாது. அதுதொடர்ந்தும் சிறிலங்காவின் முதன்மையான மதமாகவே இருக்கும். எதிர்க்கட்சியினர் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம்.

விரைவில் அரசியலமைப்புத் திருத்த வரைவு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அப்போது அதனை அனைவரும் காணலாம். அரசியலமைப்பு வரைவு சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, எல்லா பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது கருத்தை வெளியிடும் வகையில், இரண்டு அல்லது மூன்று நாட்கள் விவாதம் நடத்தவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.” என்றுள்ளார்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

முல்லைத்தீவு தேவிபுரம் பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு விமானப்படையினரின் தாக்குதலில் உயிரிழந்த 54 மாணவிகள் உள்ளிட்ட 61 பேரின் 14ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளில் இருந்து விஸ்வலிங்கம் மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார். 

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி; வெளிப்படையாகவும் நேர்மையாகவும் வரி செலுத்துவோரை கௌரவித்தல் எனும் புதிய திட்டத்தை இன்று காணொலி மூலம் ஆரம்பித்துவைத்தார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.