இலங்கை

பிரதமர் ஒருவருக்கு இருக்க வேண்டிய தகைமைகள் ரணில் விக்ரமசிங்கவிடம் இல்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உட்பட 7 பேர் மீது தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கடந்த ‘மக்கள் சக்தி’ ஆர்ப்பாட்டத்தின் போது வழங்கப்பட்ட பால் பெக்கட்டுகளில் விஷம் கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை நடத்த அரசாங்கத்திடம் வேண்டிக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

நிதி அமைச்சிற்கு சொந்தமான வாகனம் ஒன்றின் மூலமே குறித்த பால் பெக்கட்டுகள் வழங்கப்பட்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.