இலங்கை
Typography

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்குக் குத்தகைக்கு வழங்கியன் மூலம் பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

வியட்நாமின் ஹெனொய் நகரில் இடம்பெறும் ‘ஆசியான்’ உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்றுள்ள பிரதமர், சர்வதேச ஊடகவியலாளர் ஒருவருடனான நேர்காணலில் இதனைக் கூறியுள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகம் சம்பந்தமாக சீனாவுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கை 70 ஆண்டுகள் செல்லுபடியாகின்ற போதிலும், தேவையேற்படின் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதனை இரத்து செய்து கொள்ள முடியும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் இந்தியாவுக்கு அழுத்தம் ஏற்படும் எந்தவொரு செயற்பாட்டையும் இலங்கை முன்னெடுக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமருக்கு இடையில் விரோதப் போக்கு இருப்பதாக ஊடகங்களில் வெளியாகின்ற கருத்து குறித்த பிரதமரிடம் கேட்கப்பட்ட போது, அவ்வாறான விரோதம் எதுவும் இல்லை என்று பதிலளித்துள்ளார்.

உலகில் முதற்தடவையாக இரண்டு எதிர்க் கட்சிகள் இணைந்து கூட்டமைத்து நாட்டை நிர்வகித்து செல்வதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதன்போது கூறியுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்