இலங்கை
Typography

வடக்கு மாகாண சபையின் முதலாவது பதவிக்காலம் வரும் ஒக்டோபர் 25ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், ஒக்டோபர் 23ஆம் திகதி முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் பிறந்த நாளன்று வடக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு நடைபெறும் என்று அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். 

வடக்கு மாகாண சபையின் 131வது அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை பேரவைச் செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது அவைத் தலைவர் தெரிவித்துள்ளதாவது, “வடக்கு மாகாண சபையின் முதலாவது பதவிக்காலம் அல்லது ஆட்சிக்காலம் ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றது. இன்னும் மீதமாக 2 அமர்வு கள் இருக்கின்றன. இதற்கமைய இறுதி அமர்வு 23ஆம் திகதி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் பிறந்த நாளாகும். எனவே, அதனை அறிந்து 23ஆம் திகதி இறுதி அமர்வை ஒழுங்கமைத்துள்ளோம். மேலும், இறுதி அமர்வில் பிரேரணைகள் எவையும் இருக்காது. அது கண்ணதாசனின் பாடலுக்கமைய மகிழ்ச்சியாக நாங்கள் அனைவரும் கலைந்து செல்வதற்கான அமர்வாக இருக்கும். இறுதி அமர்வுக்கு முன் அமர்வு இம்மாதம் 27ஆம் திகதி நடைபெறும்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்