இலங்கை
Typography

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிடுவதாக இருந்தால், அவருக்கான வேட்பாளர் கட்டுப்பணத்தை நானே செலுத்துவேன்” என்று முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவில் வைத்து தன்னுடைய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக வருவார் எனத் தெரிவித்திருந்தமை குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டால், தங்களது கட்சி அவருடன் போட்டியிடத் தயாரா? என ஊடகவியலாளர் ஒருவர் சரத் பொன்சேகாவிடம் எழுப்பிய கேள்விக்கு, “எமது கட்சியின் தலைவர் பொருத்தமான ஒருவரை வேட்பாளராக நிறுத்துவார் என்றிருந்தால், கோட்டாவை வெற்றி கொள்வது சிரமமானதல்ல.” என்றும் பதிலளித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்