இலங்கை

புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் நோக்கில் அமைக்கப்பட்ட அரசியலமைப்புப் பேரவையின் உத்தியோகபூர்வ காலம் நிறைவடைந்துள்ளது. 

நேற்றைய தினம் (சனிக்கிழமை) முதல் அதன் உத்தியோகபூர்வ காலம் நிறைவடைவதாக பாராளுமன்ற பிரதி செயலாளர் நீல் இத்தவல கூறியுள்ளார்.

எனினும், அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்களான பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோரின் காலம் நிறைவடையாது என்றும், அண்மையில் நியமிக்கப்பட்ட மஹிந்த சமரசிங்கவின் காலமும் நிறைவடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்புப் பேரவையின் ஏனைய உறுப்பினர்களான திலக் மாரப்பன, டப்ளியூ.டீ.ஜே செனவிரத்ன மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களின் காலம் நிறைவடைவதாக பாராளுமன்ற பிரதி செயலாளர் நீல் இத்தவல குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, உத்தியோகபூர்வ காலம் நிறைவடைந்த அரசியலமைப்புப் பேரவைக்கு புதிய சிவில் சமூக செயற்பாட்டாளர்களை நியமிக்கும் ஒழுங்குமுறை சம்பந்தமாக பாராளுமன்ற செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக பெபரல் அமைப்பு கூறியுள்ளது.