இலங்கை

ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தவறியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். 

ரூபாயின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த தலைமைத்துவம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ள அவர், இல்லை என்றால், தற்போதைய நிலையை விட நாடு மேலும் சீர்குலைந்துவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கான தலைமைத்துவத்தைப் பயன்படுத்தாது, இது தொடர்பில் எதையும் முன்னெடுக்காமல், ஜனாதிபதியோ, பிரதமரோ அல்லது அமைச்சர்களோ, ரூபாயின் விலை அதிகரிக்கும் எனக் கூறுவார்களாயின், நிச்சயமாக ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்துகொண்டே செல்லும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.