இலங்கை

பாதுகாப்பு வழங்கும் அளவிற்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தகுதி வாய்ந்தவர் இல்லை என்று முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய அபிவிருத்தி அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

களனி பகுதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“கோட்டபய ராஜபக்ஷ தற்போது அரசாங்க உத்தியோகத்தர் ஒருவர் இல்லை. அவர் மக்களுக்கு தற்போது எந்த ஒரு சேவையையும் செய்யவில்லை.” என்றும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

தனது பாதுகாப்பிற்காக 17 பாதுகாப்பு உத்தியோகத்தர்களே வழங்கப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இதுவரையில் 25 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பொலிஸ் மா அதிபருக்கு முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் நியாயமான விசாரணை ஒன்றை மேற்கொண்டு உரிய தண்டனை வழங்க வேண்டும் எனவும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.